மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியைச் சேர்ந்தவர் சச்சின் மிட்கரி (வயது 38). இவர் பர்பானி வஸ்மத் சாலையில் வசித்து வருகிறார்.
இவருக்குத் திருமணம் ஆகி விட்டது. இவர் ஒரு தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார்.
இதே மருத்துவ மனையில் வேலை பார்க்கும் ஒரு பெண், அடிக்கடி, சச்சினைப் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால், சச்சின் அந்தப் பெண்ணின் ஆசைக்கு இணங்க வில்லை. இந்த டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்திருக் கிறது.
தான் திருமணம் ஆனவன் என்று பல முறை எடுத்துக் கூறியும், அந்தப் பெண், அதை யெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வில்லை.
மீண்டும், மீண்டும் சச்சின் மிட்கரியைப் பாலியல் உறவுக்கு அழைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
சச்சின் மறுத்த போது, “ என் ஆசைக்கு உடன்படா விட்டால், உன்னை கிரிமினல் வழக்கு ஒன்றில் சிக்க வைத்து விடுவேன்.
பின், ஆயுசுக்கும் நீ சிறையில் தான் இருக்கனும்” என்று மிரட்டி உள்ளார். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் சச்சின் மிட்கரி.
தனது வீட்டில், யாருமில்லாத சமயத்தில், மின் விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சாவதற்கு முன்பாக, தனது சாவிற்கு அந்தப் பெண்ணின் செக்ஸ் டார்ச்சர் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டார்.
இதனை அறிந்த, போலீசார் அந்தப் பெண் மீது, தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Thanks for Your Comments