பிரிட்டனில் "நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம்" நடத்திய புகைப்படப் போட்டியில் 10 வயதுக்குட் பட்டோருக்கான பிரிவில்
இந்தியாவை சேர்ந்த சிறுவன் அர்ஷ்தீப் சிங் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டனில் "நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம்" ஒவ்வொரு வருடமும் காட்டுயிர் புகைப்படப் போட்டி நடத்தி வருகிறது.
அந்த போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர், 11 முதல் 14 வயதுக்குட்பட்டோர், 15 - 17 வயதுக்குட்பட்டோர் என்ற 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் படுகின்றன.
இதில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட பஞ்சாப்பைச் சேர்ந்த சிறுவன் அர்ஷ்தீப் சிங் சிறந்த புகைப் படத்துக்கான பரிசை வென்றுள்ளார்.
அந்த சிறுவனின் ஊரில், அவனது அப்பாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது
சாலை யோரத்தில் இருந்த ஒரு தண்ணீர் குழாயில் இரண்டு ஆந்தைகள் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார்.
அதனை பார்த்த அர்ஷ்தீப் சிங் அவனது அப்பாவிடம், கரை நிறுத்த சொல்லி அவனது அப்பாவின் கேமராவில்
குழாய்க்குள் அமர்ந்திருக்கும் ஆந்தையை புகைப் படமாக எடுத்துள்ளான்.
பகல் நேரத்தில் ஆந்தைக்கு கண் தெரியா விட்டாலும் குழாய்க்குள் அமைந்திருந்த ஆந்தையை,
பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட ஆந்தை புகைப்படம் அனைவராலும் பாராட்டப் பட்டது.
Thanks for Your Comments