இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதலமைச்சர்
தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் இன்று துவங்கி வைத்தனர்.
இந்த துவக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவருடைய மனைவி அம்ருதாவும் வந்திருந்தார்.
சொகுசு கப்பலின் அழகில் மெய்மறந்த அம்ருதா பட்னாவிஸ் பலவித கோணங்களில் நின்று தனது தொலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
உற்சாகத்தின் மிகுதியில் ஒரு கட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்கு சென்றார்.
இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த காவல் துறையினரும், அம்ருதாவின் பாதுகாவலர் களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் கேட்டு கொண்ட பிறகும் அதற்க்கு செவிசாய்க்காத அம்ருதா,
கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதி யில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில்
செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
Thanks for Your Comments