MeToo என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !

0
#MeToo, சமீபத்தில் சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு hashtag.இணைய வாசிகள் பலருக்கும் இந்த hash tag பரிச்சயம். 
இணையத்தில் இல்லாதவர் களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.

#MeToo என்பது, "நானும் பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப் பட்டேன்" என்ற அர்த்தத்தோடு பகிரப்படும் ஒரு வாக்கியம்.
தங்களை பாலியல் ரீதியாக சீண்டிய ஆண்களின் முகத்திரையை கிழிக்கும்

வகையில் பெண்கள் முன்னெடுத்த ஒரு இணைய போராட்டம் தான் இந்த #MeToo

இந்த போராட்ட த்தை தொடங்கியவர், Alyssa Milano என்ற அமெரிக்க நடிகை.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கப் பட்ட இந்த hash tag இயக்கம், 

அமெரிக்கா வில் மட்டு மில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது.

சமூக வலை தளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, 

தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.

இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். 

இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச் சாட்டை முன் வைத்தனர்.

அதன் விளைவாக, அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.

இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 
கடந்த 4 ஆம் தேதியன்று, பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். 

தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழி யில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார்.

இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டனர்.

பிரபல இந்தி நடிகர் நானா படேக்கர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா, பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் அதை நானா படேகர் மறுத்தார்.

பூஜா பட், கங்கானா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங் களை #MeToo-வில் பகிர்ந்தனர்...

புண்பட்ட மனங்களு க்கு ஆறுதலையும், தவறு செய்தவர் களுக்கு குற்றவுணர்வை யும் தரும், 

இந்த #Metoo hash tag, தமிழகத்தி லும் பரவத் துவங்கி, பல பிரபலங்களின் அடையாளங் களை வெளிச்சம் போட்டுக் காட்டத் துவங்கி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings