ஜம்மு அருகே அமைந்த சர்வதேச எல்லை பகுதியில் கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் படையினரால்
இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரரான நரேந்திர சிங் என்பவர் கொடூர முறையில் கொல்லப் பட்டார்.
இந்த நிலையில், சிங்கின் குடும்பத்தின ருக்கு இழப்பீடு தொகை வழங்குவதற் காக டெல்லியில் ஆளும்
ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக விதிகளில் திருத்தம் செய்யப் பட்டது.
இதன்படி, வருகிற 21ந்தேதி சோனிபத் நகருக்கு செல்லும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,
சிங்கின் உறவினர்களிடம் இழப்பீட்டு தொகையை வழங்க உள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ந்தேதி சிங்கின் சொந்த கிராமத்திற்கு சென்ற கெஜ்ரிவால் அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார்.
Thanks for Your Comments