வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகைக்கு கிழக்கே 95 கி.மீ. தொலைவில் உள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும் போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும். சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
11 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் கரையை கடக்கும் பொழுது, டெல்டா மாவட்டங்களில் மழை அல்லது கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புயல் வலுவிழந்த பொழுதும் அரபி கடலை அடையும் பொழுது வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலை அடுத்து அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில்
நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 13ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments