138 கி.மீ தொலைவில் கஜா - 11 கி.மீ வேகத்தில் நகருகிறது !

1 minute read
0
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 
இதன் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது. கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாகை அருகே

இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,

நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறிய நிலையில், அந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.


முதலில் கடலூர் -ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட கஜா புயல் திசை மாறி, கடலூர்

மற்றும் பாம்பன் நடுவே வியாழக் கிழமையான இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

காலை நிலவரம்

இன்று மாலை 7 மணி நிலவரப்படி புயலானது நாகைக்குக் கிழக்கே 138 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

அது மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தீவிர புயல்

இன்று இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். நாகை அருகே அது கரையைக் கடக்கும்.

இந்த நேரம் என்பது 1 அல்லது ஒன்றரை மணி நேரம் முன்-பின் இருக்கலாம்.

இப்போது புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.

சென்னை நிலை

புயலால் சென்னைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. மிதமான மழை மட்டுமே பெய்யும்.


சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்ட, பள்ளி, கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

வெளிப் பகுதி கரையைத் தொட்டது

பாலச்சந்திரன் மேலும் கூறுகையில் தற்போது புயலின் வெளிப்பகுதி கரையைத் தொட்டு விட்டது.

இதனால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அடுத்து உட் பகுதி, மையப் பகுதி, கண் என கரையைத் தொட ஆரம்பிக்கும். அப்போது காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரிக்கும் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings