கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு
நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக திருவாரூர்,
நாகை மாவட்டத்தில் மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இரண்டாம் கட்டமாக, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து,
தேதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் ஓரிரு நாளில் வழங்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித் துள்ளார்.
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற கஜா புயல் பாதித்த மாவட்டங் களில்
தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு, பிற மாவட்டத்தினர் அவர்களால்
முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கஜா புயலால் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் திமுக சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது.
அத்துடன் திமுக எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியமும் நிவாரண பணிக்கு வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில்
சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
இது தவிரவும் நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா குடும்பத்தினர் உள்ளிட்ட
பல நடிகர்கள் புயல் நிவாரண நிதியை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments