சத்தீஷ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டு களுக்கு எதிராக
பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பான்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில்
நேற்று காலையில் போலீசார் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டி ருந்தனர்.
அப்போது அங்கே பதுங்கி இருந்த 2 பெண்கள் உள்பட 3 நக்சலைட்டு களை அவர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நக்சலைட்டு இயக்கத்தில் பல்வேறு பொறுப்பு களை வகித்து வந்த இவர்கள் 3 பேரும்
கடந்த ஆகஸ்டு மாதம் பான்சி- தண்டேவாடா சாலையில் 2 பஸ்கள் மற்றும்
ஒரு லாரியை எரித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். அந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப் பட்டார்.
இதைப் போல பர்சூர் பகுதியில் இருந்து மற்றொரு நக்சலைட்டை யும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பல்வேறு குற்ற செயல்களில் தொடர் புடைய இவரது தலைக்கும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments