உண்மை தான். அண்மையில் ஹரியானா வில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம்.
65 வயதான அமெரிக்கப் பெண் கரென் லிலியன் எப்னர் (Karen Lilian Ebner) என்பவரு க்கும் 27 வயதான இந்தியர் பிரவீணுக்கும் தான்
இந்தத் திருமணம் நடந்தது. காதலுக்கு கண் இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.
எல்லையே இல்லை என்று உணர்த்தி யுள்ளனர் இந்த ஜோடி.
இது எப்படி சாத்திய மாகியது என்று தோன்றுகிறதா? பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கில் தான்
இவர்கள் எட்டு மாதத்துக்கு முன்பு நட்பாகி பேசத் தொடங்கி யிருக்கின்றனர்.
விடியோ சேட்டில் தொடங்கிய அந்த நட்பு, குறுகிய காலத்தில் காதலாக மலர, தற்போது திருமணம் வரை வளர்ந்துள்ளது.
வயது உட்பட எல்லா எல்லை களையும் கடந்த இந்தக் காதல் திருமணம் ஜூன் 21-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது.
தன்னுடைய உறவினர்களின் சம்மதம் பெற்ற பின் கரென் இந்தியாவுக்கு பறந்து வந்து பிரவீணைக் கரம் பிடித்துள்ளார்.
இந்தத் தம்பதியர் தற்போது ஒரு வாடகை அடுக்குமாடி கட்டடத்தில் தற்காலிக மாக தங்கியுள்ளனர்.
ஜூலை 18-ம் தேதி கரென் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டும்.
எம்.ஏ. சரித்திரம் படித்துள்ள ப்ரவீண் சரியான வேலை கிடைக்காத தால் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.
அமெரிக்கா செல்ல டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பித் துள்ளார்.
பிரவீணுக்கு விசா கிடைக்க வில்லை என்றால் காரென் நிரந்தரமாக இந்தியாவில் குடியுரிமை பெற்று தங்கிவிடப் போவதாக கூறி யுள்ளார்.
Thanks for Your Comments