3000 ஆண்டு பழமையான எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு !

0
எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்தனர். 
3000 ஆண்டு பழமையான எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு !
அப்போது கெப்பில் அல்-சில்சிலா என்ற இடத்தில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக் காக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்லறையை ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்தனர். 

அதோடு அந்த உடலை பதப்படுத்து வதற்காக சுற்றப் பட்டிருந்த துணியுடன், மரச் சவப்பெட்டியின் எஞ்சியுள்ள கரிமப் பொருளும் கண்டு பிடிக்கப்பட்டது.

அதே இடத்தில் மேற்கொண்டு சில கல்லறை களையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் ஆறுலிருந்து ஒன்பது வயதுக்குட் பட்ட குழந்தைக்கான சவப்பெட்டி, 

மற்றொன்றில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட் பட்ட குழந்தைக்கான சவபெட்டியும் கண்டு பிடிக்கப் பட்டது. 
இந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மண்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது கல்லறையில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட் பட்ட குழந்தைக் கானதாகும். 

சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்ட 35 சென்டி மீட்டர் உயரமான கால் மற்றும் வலது கையிழந்த தலையற்ற பெண்ணின் சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.

இந்த சிலை அணிந்திருந்த உடையானது, கிரேக்க பெண் கடவுளான ஆர்டேமிஸ் அணிந்திரு க்கும் உடை போல் இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர். 

எகிப்தின் 18-வது ராஜ வம்சத்தில் (1549/1550- 1292 கிமு) இந்த எலும்புக் கூடுகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட் டுள்ளனர். 
'தட்மாசிட்' என்றழைக் கப்படும் எகிப்தின் 18-வது ராஜவம்ச காலத்தில் கடை பிடிக்கப்பட்ட இறுதி சடங்கு முறைகள், 

அக்காலத்து மக்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் மத வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள 

இந்த புதிய கண்டு பிடிப்புகள் உதவும் என ஸ்வீடன் ஆராய்ச்சி குழுவின் தலைவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings