ஸ்ரீநகரில் 3 ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் கைது !

0
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, காஷ்மீர் போலீஸாரின் உதவியுடன் டெல்லி போலீஸார் 
நடத்திய அதிரடி சோதனையில், ஐஎஸ் ஆதரவு அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் ஸ்ரீநகரில் நேற்று கைது செய்யப் பட்டனர்.

இவர்கள் 3 பேரும் 'ஜம்மு-காஷ்மீர் ஐஎஸ்' (ஐஎஸ்ஜேகே) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஐஸ் தீவிரவாதிகள் அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்டு ஐஎஸ்ஜேக தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஐஎஸ்ஜேகே அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதி களை கடந்த இரு மாதங்களு க்கு முன் டெல்லியில் போலீஸார் கைது செய்தனர். 

அவர்கள் அளித்த தகவலில் டெல்லியில் தாக்குதல் நடத்தத் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.

இதை யடுத்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர் களைப் பிடிக்க டெல்லி போலீஸில் தனிப்படை அமைக்கப் பட்டது. 

இந்நிலையில், ஸ்ரீநகரில் ஐஎஸ்ஜேகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை யடுத்து, 

ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் உதவியுடன் இந்த மூன்று தீவிரவாதி களை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் ஆணையர் பிரமோத் சிங் குஷாவா கூறுகையில் ஸ்ரீநகரில் ஐஎஸ்ஜேகே அமைப்பினர் 

பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காஷ்மீர் போலீஸாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். 

அப்போது, கோதி பாக் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தோம். 

அப்போது அவர்கள் முரணாகப் பதில் அளித்தபோது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஐஎஸ்ஜேகே தீவிரவாத அமைப்பினர் என்பது தெரிந்தது.

இவர்களின் பெயர் தாஹிர் அகமது தான், ஹரிஸ் முஸ்தாக் கான், ஆசிப் சுஹெல் நதாப் ஆகியோர் என்பது தெரிந்தது. 

இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த அமைப்பைச்  சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினரைச் சந்தித்து வருவது தெரிந்து. 

இவர்களின் ஆப்பிள் தோட்ட மறைவிடத்தில் இருந்து கேஸ் சிலிண்டர், துணிகள், சமையல் பாத்திரங்கள் கைப்பற்றப் பட்டன. 

இவர்கள் ஜம்மு காஷ்மீரில் இதுவரை 3 முறை தீவிரவாத தாக்குதல் களில் ஈடுபட் டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள், கையெறி குண்டுகள், 4 செல்போன்கள், ஐஎஸ் கொடிகள், 

கறுப்புக் கொடிகள், வைபை கருவி, மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன “ எனத் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings