தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளி மற்றும் கல்லூரிகளு க்கு நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிரு க்கும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், தாழங்காடு, கூனிமேடு மற்றும் சுற்று வட்டார கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வட தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளு க்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து பள்ளிகளு க்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தர விட்டுள்ளார்.
இதே போன்று காஞ்சி புரத்திலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தர விட்டுள்ளார்.
மேலும் திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப் படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித் துள்ளார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திருவள்ளூரிலும் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு விடுமுரை அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் புதுசேரியிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளு க்கும் நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments