தென்னைக்கு ரூ.50,000 கேட்டு வழக்கு - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு !

0
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா 50,000 ரூபாயை இழப்பீடாக வழங்க கோரிய வழக்கில், 
தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

கஜா புயலில் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. 

இந்தப் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 82,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 


2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு, 735 கால்நடைகள் உயிரிழந் துள்ளன. 

1.17 லட்சம் வீடுகளும், 88,102 ஹெக்டேர் பரப்பளவி லான விவசாயமும் சேதமடைந் துள்ளன. 

இவற்றைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கி பணி செய்து வருகின்றனர்.

இந்நிலை யில், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

`கஜா புயலால் உயிரிழந்த வர்களின் குடும்பத்துக்கு 30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். 

அதே போல் புயலில் காயமடைந்த வர்களுக்கு 10 லட்ச ரூபாயையும், ஒரு தென்னை மரத்துக்கு 50,000, 

நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 50,000, வாழைக்கு ஏக்கருக்கு 2 லட்சம், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு 50,000ம், படகு, 


வலைகளை இழந்து தவிக்கும் மீனவர் களுக்கு 10 லட்சம் ஆகிய வற்றை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறி யிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings