கர்நாடகாவில் 5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் !

0
கர்நாடகாவின் ஹடிகினஹள்ளி யில் 5கோடி ரூபாய் மதிப்பிலான 3டன் செம்மரக் கட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள லங்க மலை, மற்றும் நல்ல மலை வனப்பகுதி யில் 


செம்மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

இவ்வாறு வெட்டப்படும் செம்மரங்கள் அனந்தபூர் வழியாக கர்நாடகாவில் உள்ள ஹடிகினஹள்ளி என்ற ஊருக்கு எடுத்துச் செல்கின்றனர். 

அங்கிருந்து வெளி நாடுகளுக்கு இந்த செம்மரக் கட்டைகள் கடத்தப் படுகிறது. 

இந்த கடத்தல் சம்பவம் பற்றி தகவல் அறிந்த கடப்பா காவல் துறையினர் கர்நாடக மாநிலத்தி லுள்ள சம்பங்கிஹல்லி பகுதியில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் லீலா குமார் என்பவர் கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணை யில் ஹடிகினஹல்லி பகுதியில் ஒரு குடோனில் 

வைக்கப் பட்டிருந்த 5 கோடி மதிப்புடைய 3 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து குடோனில் வைக்கப் பட்டிருந்த செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு 

பயன் படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 


மேலும் செம்மரக் கடத்தலில் நீண்ட நாளாக தேடிக்கொண்டு இருக்கும் முக்கிய குற்றவாளி யான முஜீப் மற்றும் கியாஸ் ஆகியோரை கைது செய்தனர். 

முஜீப் மீது ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகள் உள்ளது .

இவர் சர்வேதச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர் என காவல்துறை உதவிக் கண்காணிப் பாளர் லெட்மி நாரயனா தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings