ரஷ்யாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு !

0
ரஷ்யாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் பொது மக்களிடையே அச்சம் நிலவுகிறது. 


ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான காம்சட்கா தீபகற்பத்தை ஒட்டிய கடல் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இந்த நிலநடுக்க மானது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகி யுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பலமுறை அங்கு நில அதிர்வுகளும் உணரப்பட்டன. 

நிலநடுக்க பீதியால் கரையோரம் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

6.0 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பெரிய அளவில் சேதம் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பொருட்சேதம் மற்றும் சுனாமி குறித்த தகவல்கள் வெளியிட வில்லை. 

இதே போல் கடந்த மாதம் காம்சட்கா தீபகற்பத்தில் 5.7 என்ற அளவில் ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் பதிவானது. 


இந்நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட் டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

மேலும் இந்த தீபகற்பத்தில் சிறியதும், பெரியது மான 160 எரிமலைகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings