மணப்பாறை யில் கஜா புயலால் சாய்ந்த 70 ஆண்டு கால அரசமரத்தை அந்த பகுதியை சேர்ந்த ஓட்டுநர்கள் மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைத் துள்ளனர்.
மரம் மீண்டும் துளிர்த்து பயன் தரும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.
தமிழகத் தின் டெல்டா மாவட்டங் களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந் துள்ளனர்.
12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு வேராக முறிந்து கிடக்கின்றன.
புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப் படுத்தும் பணியும் தொடர்கிறது. திருச்சி மாவட்ட த்தையும் கஜா புயல் விட்டு வைக்க வில்லை.
கஜா புயலின் தாக்கத்தி னால் மணப்பாறை, கோவில்பட்டி சாலையில் தனியார் மோட்டார் வாகன ஓட்டுநர்
சங்க நிலையத்தில் இருந்த அரச மரம் வேரோடு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் மீது சாய்ந்தது.
மரத்தை அகற்றத் தேவையான நடவடிக்கை ககள் எடுக்கப் படாத நிலையில், தேசிய நெடுஞ் சாலையிடம் அனுமதி பெற்று
மரத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர் வாகன ஓட்டுநர்கள்.
கிளைகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் வைக்கப் பட்டுள்ள மரம் துளிர்த்துப் பயன் தரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.
Thanks for Your Comments