பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் ஏற்படும் அறிகுறிகள் !

மழை காலங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் வந்து தண்ணீர் தேங்குவது என்பது வாடிக்கையாகி விட்டது. 


சென்னை வெள்ளம், வர்தா புயல் ஆகிய சம்பவங்களில் போது பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகவும் கஷ்டப் பட்டனர்.

பலரது கார், பைக் தண்ணீரில் முழ்கியது. அதில் சில பயன்படாத நிலைக்கே சென்றது.

இனி அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் கார்களில் தண்ணீர் புகுந்து அது கார் இன்ஜினில் எந்த மாற்றங்களை ஏற்படுத்து  கிறது.

அதனால் ஏற்படும் பிரச்னைகள், அறிகுறிகள், அதற்கான தீர்வுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அவற்றை பற்றி தான் விவரிக்கிறது இந்த செய்தி

குறைந்த மைலேஜ் 


இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால் காரின் பவரும் மைலேஜூம் குறைந்து விடும். இது தான் முதல் அறிகுறி

இன்ஜின் செயல் திறன் 

காரின் இன்ஜின் வழக்கத்திற்கு மாறாக செயல்பட துவங்கும் ஆங்காங்கே இன்ஜினின் செயல்பாடும் நின்றுவிடும்.

ஆர்பிஎம் குறைவு 


நாம் இன்ஜினை செயல்படுத்த அதிகம் மெனக்கெடுதல் வேண்டும். வழக்கான ரேஸிங்கில் கிடைக்கும் ஆர்பிஎம்யை விட குறைவான ஆர்பிஎம்மே கிடைக்கும்.

இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது 

இன்ஜில் தண்ணீர் இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது. குறைவான தண்ணீர் இருந்தால் சில முயற்சிகள்


செய்யும் போது இன்ஜின் சூடாகி அதில் உள்ள தண்ணீர் ஆவியாகும் பட்சத்தில் ஸ்டார்ட் ஆகிவிடும்.

அதிக தண்ணீர் இருந்தால் இன்ஜின் செயல் படாமலே போகும்.

புகை வெளியிடும் கருவி 

இன்ஜினில் இருந்து ஆவியாகும் தண்ணீர் புகை வெளியிடும் கருவி வழியாக வெளியேற்றப் படும்.

சில நேரங்களில் ஆவியான தண்ணீர் புகை வெளியிடும் கருவியில் குளிர் இருந்தால் மீண்டும் தண்ணீராக மாறிவிடும்.


புகை வெளியாகும் கருவியில் தண்ணீர் இரந்தால் இது கூட காரணமாக இருக்கலாம்.

Tags:
Privacy and cookie settings