கொல்கத்தா விமான நிலைய த்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் ஒன்று கொல்கத்தா வில் இருந்து மும்பை நோக்கி புறப்பட தயாரானது.
இந்த விமானத்தில் அமர்ந்து இருந்த பயணி யோகவேதாந்த பொடார் (வயது 20) என்பவர் வீடியோ சாட்டிங்கில் ஈடுபட்டார்.
விமானம் புறப்பட தயாரான நிலையில், அந்த நபர் வெடிகுண்டு களை பற்றி பேசி யுள்ளார்.
இதனை கேட்ட அருகில் இருந்த பயணிகள் விமான ஊழியரிடம் எச்சரிக்கை செய்துள்ளனர்.
அவர் விமானியிடம் வெடிகுண்டு அச்சுறுத்தலு க்கான சாத்தியம் உள்ளது என தெரிவித் துள்ளார்.
இதனை அடுத்து இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித் துள்ளார்.
இதனை தொடர்ந்து விமான நிலைய த்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப். போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
அதன்பின் அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விசாரணைக் காக கொண்டு செல்லப் பட்டார்.
இதில், அந்த பயணி வேலைக் கான நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ள மும்பை செல்வது தெரிய வந்தது.
அவரது நோக்கங் களை பற்றி அறிவதற்காக விசாரணை தொடருகிறது என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Thanks for Your Comments