பழைய துணியால் அம்மா சிலையை மூடி அவமதிப்பதா?” - தினகரன் !

0
ஜெயலலிதா வின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இந்திய அரசியலில் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக கருதப் பட்டவர் ஜெயலலிதா. 

சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கிய அவர், தமிழக அரசியலிலும் யாரும் அசைத்து பார்க்க முடியாத பெரும் தலைவராக விளங்கினார். 


தமிழகத்தின் முதல் பெண் எதிர்க் கட்சித் தலைவர் என்ற பெருமை ஜெயலலிதா வுக்கு உண்டு.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் 

ஜெயலலிதாவை சாரும். ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதா வின் 70வது பிறந்த நாள் விழா இந்தாண்டு கொண்டாடப் பட்டது. 

அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா வின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. 

இந்தச் சிலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து திறந்து வைத்தனர்.

ஆனால் திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா போன்றே இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். 


அதற்கு பதிலாக வேறு சிலை வைக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்தது. 

அதன்படி இன்று புதிதாக ஜெயலலிதா சிலை உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. 
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே உள்ள எம்ஜிஆர் சிலை பக்கத்தில் ஜெயலலிதா சிலை அமைக்கப் பட்டுள்ளது.

இதனிடையே ஜெயலலிதா வின் சிலையை பழைய துணி போட்டு மூடியது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா வின் சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா எனக் கேள்வி எழுப்பி யுள்ளார்.

முன்பு அவரசகதியில் திறக்கப்பட்ட ஜெயலலிதா வின் சிலைக்கு மாற்றாக இன்று புதிய சிலையை திறந்த நிகழ்வில் 


ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில் அச்சிலையை பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ள தாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதா கவும் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings