காவலர்கள் பாதுகாப்பு பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆண், பெண், திருநங்கைகள் என ஏராளமான போலீசார் நாள் தோறும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களு க்கு பொங்கல், தீபாவளி உள்ளிட்ட நல்ல நாட்களில் கூட விடுமுறை கிடைப்ப தில்லை என்ற புகாரும் உள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணி நிமித்தமாக செல்போன் பயன் படுத்தலாம் என கூறப்பட் டுள்ளது.
சட்டம்- ஒழுங்கு, விவிஐபி, கோயில், திருவிழாக்கள் பாதுகாப்பு பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை அந்தந்த காவல் நிலையங் களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியின் போது காவலர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவ தால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு, காவல்களை பாதிக்கும் என கருதப் படுகறிது.
Thanks for Your Comments