பாதுகாப்பு பணியில் இருந்து எஸ்.பி யாதிஷ் மாற்றம் !

0
சபரி மலையில் அனைத்து வயதுப் பெண்களை யும் அனுமதிக்க லாம் என்று


உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கி விட்டதால், பக்தர்கள் சபரிமலை க்கு 

வந்து செல்ல கடும் கட்டுப் பாடுகளையும், விதி முறைகளையும் போலீசார் விதித்துள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால், பம்பையில் வாகனங் களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், 

அதற்குப் பதிலாக அடிவாரப் பகுதியான நிலக்கலில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தக் கூறியுள்ளார்.

அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசுப் பேருந்தில் தான் செல்ல முடியும். 


மேலும் இரவு நேரத்தில் சன்னி தானத்திலும் பக்தர்கள் தங்குவற்கு கடும் கட்டுப் பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். 

ஆயிரக் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு கடுமையான கெடுபிடிகள் காட்டப் படுவதாக கூறப் படுகிறது.

கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலை க்கு சென்ற போது 

நிலக்கல் பகுதியில் அவருடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி., யாதீஷ் சந்திரா வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் பட்டது. 

எனினும், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட ஆளும் தரப்பு எஸ்.பி., செய்தது சரி தான் என்று விளக்கம் அளித்தனர்.

இந்த சூழ்நிலையில், நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை கேரள அரசு அறிவித் துள்ளது. 


அதன்படி உளவுத் துறை ஐ.ஜி., அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நிலக்கல் பகுதி பாதுகாப்புக்கு நியமிக்கப் பட்டுள்ளது. 

எஸ்.பி., யாதீஷ் சந்திரா வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings