கர்நாடக மாநிலத்தில் உள்ள பாண்டவபுரம் கனகனமாரடியில் ஓட்டுநரின் கட்டு ப்பாட்டை இழந்த
தனியார் பேருந்து கால்வாயில் விழுந்து முற்றிலும் மூழ்கியது இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
பின் தீயணைப்புத் துறை மற்றும் பொது மக்களால் மீட்கப்பட்ட காயமடைந்த பயணிகள்
அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலையில் நடந்த இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் பலியானதாக தகவல் வெளி யாகின்றன.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடக்க ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா
இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments