மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த போலீஸ் !

0
கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. 
இதனை யடுத்து மண்டல பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறக்கப் பட்டுள்ளது. 

எனவே தேவையற்ற அசம்பாவிதங் களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 


போலீசாரின் கிடுக்குப் பிடியால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சிரமம் அடைந்துள்ள தாக கூறுகின்றனர்.

இந்நிலை யில் மத்திய இணையமைச்சர் பொன் .ராதா கிருஷ்ணனும் சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டி யுள்ளார். 

கோயில் செல்ல நிலக்கல் சென்ற அவர் பம்பை செல்ல முயற்சித் துள்ளார். 

அப்போது பம்பைக்கு அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

அவருடன் வருபவர்கள் கேரள அரசின் பேருந்தில் தான் பம்பைக்கு செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்து விட்டனர். 

இதனால் பொன் .ராதா கிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பொன். ராதா கிருஷ்ணன் கூறும் போது, கேரள அரசு தேவையற்ற சிரமங்களை பக்தர்களுக்கு ஏற்படுத்துவ தாக கூறினார். 

அரசு வாகனங்களை மட்டுமே பம்பைக்கு அனுமதிப்போம் என போலீசார் கடுமையாக நடந்து கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து அரசு பேருந்தில் செல்ல முடிவு செய்த பொன்.ராதா கிருஷ்ணன், பம்பைக்கு தன் வண்டியில் செல்லாமல் அரசு பேருந்தில் சென்றார். 

பின்பு, சபரிமலை சன்னிதானம் சென்று சுவாமி ஐயப்பனை தரிசித்து விட்டு, சன்னிதானம் பகுதியிலேயே படுத்து உறங்கினார்.


சபரிமலை ஐயப்பன் கோவிலை பொறுத்த வரை மண்டலப் பூஜை காலங்களில் 

காலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 

பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லப்படும் நெய் தேங்காயை ஐயப்பன் அபிஷேகத்து க்கு வழங்குவார்கள். 

ஐயப்பன் கோயிலின் மிக முக்கியமான சடங்கு இதுவே. 

எனவே பகல் 12 மணிக்கு மேல் செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு, நெய் அபிஷேகம் செய்வதற்காக மறு நாள் வரை காத்திருப் பார்கள். 

எனவே மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனும் நெய் அபிஷேகத்துக் காக கோயிலில் தங்கி விட்டார்.

சபரிமலை கோயிலில் தரிசனம் முடித்து விட்டு இன்று அதிகாலை திரும்பும் வழியில், 

பம்பை காட்டுப் பகுதியில் அவரது வாகனத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

மத்திய அமைச்சர் என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு காவல் துறையினர் கடிதம் கொடுத்தனர். 

இந்நிலையில், சபரிமலை யில் தரிசனம் முடித்து திரும்பிய போது பம்பையில் காட்டுப் பகுதி வழியே 


வாகனத்தில் வந்த போது அவரது வாகனத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். 

அப்போதும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் என்று தெரிந்ததை யடுத்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings