கஜா புயல் எதிரொலி - தேர்வுகள் ஒத்தி வைப்பு !

0
கஜா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான கஜா புயல் தமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. 

இந்தப் புயலானது, தற்போது பாம்பன் - நாகை இடையே கரையைக் கடக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 


இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்ப தால், 

மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. 

இதனால், தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளு க்கு நாளை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

அதே போல், நாளை நடைபெற இருந்த தேர்வுகளை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகமும் ஒத்தி வைத்துள்ளது. 

இது குறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

‘கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 

மாவட்டக் கலெக்டரின் அறிவுறுத்தலின் படி 15.11.2018 அன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 


இதை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) நடக்க இருந்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. 

இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறும்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings