நாகை மாவட்டம் வேட்டைக் காரனிருப்பில் முகாமில் தங்கியுள்ள மக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணவு சாப்பிட்டார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தனது ஆய்வை தொடங்கினார்.
பின்னர் அவர் புயலில் பாதிக்கப் பட்டவர்க ளுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது பொதுமக்கள் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி யிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இதை பெற்றுக் கொண்ட அவர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தார்.
தொடர்ந்து வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் உள்ள முகாமிற்கு சென்ற
முதல்வர் அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளை பார்வை யிட்டதோடு, அந்த உணவுகளை தானும் சாப்பிட்டார்.
உடன் துணை முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வம், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Thanks for Your Comments