இன்சுலின் மருந்து ஏற்றுதல்:
இன்சுலின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்துகின்றது.
எவ்வாறு இன்சுலின் மருந்தை சேமிக்கலாம்?
இன்சுலின் மருந்தை குளிர்சாதனப் பெட்டியின் மத்திய பகுதியில் 2-8 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும்.
பிளாஸ்ரிக் பெட்டியில் இன்சுலின் குப்பியையும் (Insulin vial) சிறிஞ், ஊசி என்பவற்றையும் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தல் சிறந்தது.
அதிகுளிர் (Freezer compartment) பகுதியில் சேமித்து வைக்க வேண்டாம். நீங்கள் இன்சுலின் மருந்தை ஏற்றும் பேனா பாவித்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை.
வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லா விட்டால் எப்படி இன்சுலினை சேமித்து வைக்கலாம்.
இன்சுலின் குப்பியை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து ஒரு மண் பானையில் நீர் இட்டு அதற்குள் வைத்து சேமிக்கலாம்.
இதை குளிரான நிழலான இடத்தில் வைக்கவும். இதனை சூரியவொளி, வெப்பம் பாடாதவாறு வைக்கவும்.
அப்படி வைத்தால் இன்சுலின் பழுதடைந்து விடும். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தால் எவ்வாறு இன்சுலினை கொண்டு செல்லலாம்.
சுடுநீர் போத்தலினுள் (Flask) ஐஸ் கட்டி ஒரு துண்டு இட்டு இன்சுலின் குப்பி ஜஸ் (Ice) கட்டியில் படாதவாறு வைத்துக் கொண்டு செல்லலாம்.
இன்சுலின் குப்பியை ஐஸ் (Ice) நீரில் நேரடியாக தொடாதவாறு வைக்க வேண்டும்.
இன்சுலின் குப்பியை ரேஜிபோம் பெட்டியினுள் வைத்துக் கொண்டும் செல்லலாம்.
எவ்வாறு இன்சுலின் ஏற்றும் சிறிஞ், ஊசியை நாம் தெரிவு செய்யலாம். நீங்கள் 1 மில்லி லிட்டர் அளவிடப்பட்ட தொற்று நீக்கம் செய்த சிறிஞ்சை (Syringe) பயன்படுத்தலாம்.
29 கேச் (29G) ஊசி பயன்படுத்த வேண்டும். ஊசியின் நீளம் அரை அங்குலமாக இருத்தல் வேண்டும். இதை விட நீளம் கூடவாக இருந்தால் தசைக்குள் இன்சுலின் செலுத்தப்படும்.
இன்சுலின் தோலிற்கு கீழாக செலுத்தப்பட வேண்டும். தசைக்குள் இன்சுலின் செலுத்தப் பட்டால் இன்சுலின் விரைவில் பயன்படுத்தப்பட்டு விடும்.
உடலில் எப்பகுதியில் இன்சுலினை ஏற்றலாம்.
ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு தடவை நீங்கள் ஊசி போடும் பகுதியை மாற்றவும். ஒரு பகுதியில் ஊசி போடும் இடத்தை (spot) ஒவ்வொரு நாளும் மாற்றவும்.
அப்படி ஒரே இடத்தில் நீங்கள் ஊசி போட்டால் அவ்விடம் தடிப்படைந்து விடுவதுடன் இன்சுலினும் ஒழுங்காக உடலினுள் அகத்துறிஞ்சப்படாது.
ஓர் இடத்தை (spot) 3-4 கிழமைக்கு ஒரு தடைவை பயன்படுத்தவும். நீரிழிவு நோயாளிகள் நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் உணவுப் பழக்கம் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
Thanks for Your Comments