ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் விபத்துக் குள்ளானதில் ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் சாத்துவாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி.
இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சின்னச் சாமியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால்,
அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து வேலூருக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில் ஸ்ரீபெரும் புதூரை அடுத்த
மாம்பாக்கம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக சென்ற காருடன் மோதி விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸும், காரும் சாலை யிலேயே கவிழ்ந்தது.
ஆபுலன்ஸில் இருந்த சின்னச்சாமி உடல் நிலை மீண்டும் மோசமானது.
அவர் உடனே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் இருந்த 4 பேர் மற்றும் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுனர் உட்பட 5 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments