தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சபாநகரி கிராமத்தில் வசித்து வந்தவர் நதீம் மன்சூர்.
இவர் ராணுவத்திற்கு தீவிரவாதி களின் இருப்பிடம் பற்றி தகவல் கூறினார் என்ற குற்றச்சாட்டில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப் பட்டார்.
இந்த நிலையில், தீவிரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் நைகூ வெளியிட் டுள்ள ஆடியோ பதிவொன்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதில், தீவிரவாதி களிடம் பேசும் மன்சூர், வீட்டிற்கு செல்லும் வழியில் கிராமத்தில் தீவிரவாதிகளை பார்த்தேன்.
ராணுவ அதிகாரிக்கு மிஸ்டு கால் ஒன்று கொடுத்தேன். அவர் என்னை அழைத்த பின்,
எனது வீடு அருகே கிராமத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என அவரிடம் கூறினேன் என்று பேசியுள்ளார்.
இது பற்றி பேசிய தளபதி நைகூ, மன்சூர் 2 தீவிரவாதி களை பற்றி ராணுவத்திடம் கூறியுள்ளான்.
அவர்கள் கடந்த 6ந்தேதி சோபியானின் சபாநகரி பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப் பட்டனர் என கூறினார்.
தொடர்ந்து மற்றொரு வீடியோவில், நதீம் மன்சூரின் உடலில் தீவிரவாதிகள் குண்டுகளை பாய்ச்சுகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில், மன்சூரின் உடல் நேற்று காலை கைப்பற்றப் பட்டது. இதற்கு தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.
பேராசையால் மன்சூர் படையினரிடம் தகவல் கொடுத்துள்ளான். நாங்கள் யாரையும் கொல்ல விரும்ப வில்லை.
ஆனால் அவர்கள் (தகவல் அளிப்போர்) எங்களை அப்படி செய்ய கட்டாயப் படுத்துகின்றனர்.
இது போன்ற வீடியோக்கள் வருங் காலங்களில் வெளியிடப்படும். துரோகிகள் இதே முடிவை எட்டுவர் என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments