கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை !

0
சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் வன்முறை யில் ஈடுபட்ட துப்பாக்கி மனிதனை 
துரத்திப் பிடித்து மக்கள் உயிரைப் பாதுகாத்த கருப்பின இளைஞரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்ற கொடுமை நிகழ்ந்தது.

மதுபானக் கூடத்தில் ஜெமல் ராபர்சன் பாதுகாப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார். 


அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்தப் பகுதியில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வன்செயலில் ஈடுபட்டார். 

அவரை துரத்திப் பிடித்த ஜெமல் ராபர்சன் அவரை துப்பாக்கி முனையில் முட்டிப்போட வைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் தந்துள்ளார். 

ஆனால் சிறிது நேரத்தில் அந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை எதையும் விசாரிக்காமல் 

கறுப்பினத் தவரான ராபர்சனை நோக்கி சுட்டுள்ளது.இதில் ராபர்சன் பலியானார்.

இசைக் கலைஞரான ராபர்சன்னுக்கு காவல் துறையில் சேர வேண்டுமென்ற கனவு இருந்தது. 

ஆனால் அவரை காவல் துறையே பலி கொண்டது கொடுமை. ராபர்சன் பல தேவாலயங்களில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார்.


சம்பவதினத்தன்று ராபர்சன் பணியாளராக பணிபுரிந்த மாதுபானக் கடையில் சண்டை ஏற்பட்டது. இதில் நான்கு பேர் சுடப்பட்டனர். 

இதனை தொடர்ந்து காவலர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது என்கிறார் குக் கண்ட்ரி ஷெரீப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் சோஃபியா அன்சாரி.

நேரில் பார்த்தவர் கூறியது

ராபர்சன் அங்கு காவலராக பணியாற்று கிறார். துப்பாக்கிக் கான உரிமத்தையும் வைத்திருக்கிறார். 

மதுபானக் கடையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை துரத்திப் பிடித்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஆடம் ஹாரிஸ் என்பவர் கூறியுள்ளார்.

“போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு பிடிபட்டவருடன் காத்திருந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த ராபர்சனை குற்றவாளி என தவறுதலாக நினைத்து விட்டனர் 

என நினைக்கிறேன். அவர்கள் ராபர்சனை நோக்கி சுட்டனர்.”என்றும் கூறியுள்ளார்.

அவர் ஒரு பாதுகாப்பு அலுவலர் என அங்கு சூழ்ந்திருந்த அனைவரும் கத்தினோம். 

கருப்பினத்தவர் கையில் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து விட்டு போலீசார் சுட்டனர் என்று கூறி யிருக்கிறார் ஹாரிஸ் .

“மதுபான கடையின் உள்ளே பலர் துப்பாக்கி முனையில் பிடித்து வைக்கப் பட்டிருக்கின்றனர்” என எங்களுக்கு தகவல் வந்தது என்றும் 


ராபர்சன் சுட்டுக் கொல்லப் பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்தப் பகுதி போலீஸ் உயரதிகாரி கூறி யுள்ளார்.

ஜெமல் ராபர்சனின் இறுதிச் சடங்கிற்காக 12,000 டாலர்கள் நிதி திரட்டுப் பட்டுள்ளது.

இந்த நிதியை திரட்டிய கோஃபண்ட்மீ பக்கத்தில், “ஜெமல் ஒரு கூடைப் பந்து வீரர், இசைக் கலைஞர், இறைவனை நேசித்தவர். 

ஆனால், அறிவற்ற வன்முறையி லிருந்து பலரை காக்கும் முயற்சியில் மரணித்துள்ளார்.” என குறிப்பிட் டுள்ளது. 

அவ்வாறே அமெரிக்க மக்கள் ராபர்சன்னை தங்களின் கதாநாயகனாக கொண்டாடி வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.


அமெரிக்கா வில் நடக்கும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கருப்பினத்த வரை குறி வைத்து நடத்தப்படும் 

துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை அதிக விகிதாச்சாரத்தில் இருப்பதாக எஃப்.பி.ஐ. தரவுகள் தெரிவிக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings