விலையில்லா வெள்ளாடுகள் வழங்கத் தேர்வாகும் பயனாளிகள் மானியத் தொகையை விட கூடுதல் செலவு செய்கின்றனர்.
இதனால் அரசு கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும் எனப் பயனாளிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையி லான அதிமுக அரசின் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத் தின் கீழ்
இந்த ஆண்டு, 1.50 லட்சம் பயனாளி களுக்கு, 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக ஏற்பட்ட தீவனத் தட்டுப் பாட்டால் 2016 நவம் பரில் நிறுத்தி வைக்கப்பட்ட
இந்தத் திட்டம், தற்போது கால்நடை பரா மரிப்பு துறை மூலம் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது.
இதைய டுத்து பயனாளிகள் தேர்வு கிராம சபாக்கள் மூலம் நடைபெற்று வரு கின்றது.
இந்நிலையில் வெள்ளாடு கள் வழங்கத் தேர்வு செய்யப் பட்டுள்ள பயனாளிகள், அரசியல் வாதிகள்
மற்றும் அதிகாரிகளிடம் கூடுதல் தொகை கொடுத்தால் மட்டுமே ஆடுகள் வழங்கப்படு வதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பயனாளிகள் கூறியதாவது:
3 பெட்டை ஆடு, ஒரு கிடா ஆடு கொள்முதல் செய்ய அரசு ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. கொட்டகை அமைக்க, ரூ.2 ஆயிரம் வழங்குகிறது.
ஆனால் பயனாளிகளிடம் கால்நடைத் துறை அதிகாரிகள் நேரடியாகப் பணம் வாங்காமல்
அரசியல் வாதிகள் மூலம் ரூ. 2 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்குகின் றனர்.
பணம் தராத பயனாளிகளின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப் படுகிறது என்றனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பயனாளிக ளாகத் தேர்வு செய்யப் பட்டவர்க ளுக்கு கால்நடைத் துறை சார்பாக வழங்கப்படும் ரூ.10 ஆயிரம், 4 ஆடுகள் வாங்கப் போதுமானதாக இல்லை.
எனவே பயனாளி களிடம் கூடுதல் தொகை வாங்கி, அவர்கள் முன்னிலையில் வியாபாரி களிடம் பணம் செலுத்தி ஆடுகளை வாங்கி வருகிறோம்.
இதனால் மானியத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் எனப் பயனாளிகள் சார்பில் அரசிடம் வலியுறுத்தப் பட்டது.
அதன்படி ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித் தது. ஆனால் அது இன்னும் நடை முறைப் படுத்தப்பட வில்லை.
இதற் கான அரசு ஆணையும் வெளியிடப் படவில்லை. அதுவரை பயனாளிக ளிடம் கூடுதல் தொகை வாங்குவது தவிர்க்க இயலாது, என்றார்.
Thanks for Your Comments