அயோத்தி யில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று விஎச்பி, சிவசேனா, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில்,
அந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக ராமருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கும் விவரங்களை உத்தரப்பிரதேச அரசு நேற்று இரவு வெளி யிட்டது.
221 அடி உயர ராமர் சிலை அயோத்தியில் அமைப்பது என்று நேற்று இரவு முதல்வர்
யோகி ஆதித்யநாத் தலைமை யிலான அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.
இது குறித்து உ.பி. அரசு செய்தித் தொடர்பாளரும், தகவல் துறையின் கூடுதல் செயலாளரு மான
அவினேஷ் குமார் நேற்று இரவு கூறுகை யில், அயோத்தி யில் ராமர் பிறந்த இடத்தில் 151மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப் படும்.
அதில் படிக்கட்டுகள் மட்டும் 50 அடி உயரத்தில் இருக்கும். தலையில் வைக்கப்படும் கிரீடம் 20 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
ஒட்டு மொத்தமாக ராமர் சிலையின் உயரம் 221 மீட்டர் உயரத்தில் இருக்கும். இந்தச் சிலை முழுவதும் வெண்கலத் தால் உருவாக்கப் படும்.
அயோத்தி சென்றார் உத்தவ் தாக்ரே; நாளை விஎச்பியின் ‘தர்ம சபா’ கூட்டம்:ஆயிரக் கணக்கில் போலீஸ் குவிப்பு
மேலும், சிலையைச் சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள், சரயு நதிக்கரை யில் குருகுலம்,
சிலையைச் சுற்றி பூங்காக்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி யில் ராமருக்குச் சிலை அவர் பிறந்த இடத்தில் வைக்கப்படும்.
அதற்கான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித் திருந்தது குறிப்பிடத் தக்கது.
அயோத்தி யில் இன்று விஸ்வ இந்து பரிசத் சார்பில் அயோத்தி யில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தர்ம சபைக் கூட்டம் நடத்தப் படுகிறது.
அதே போல, சிவசேனாக் கட்சியும் சரயு நதிக்கரை ஓரத்தில் தனியாகக் கூட்டம் நடத்துகிறது.
இதனால், அயோத்தி யில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு ஆயிரக்கணக் கான போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச அரசு ராமர் சிலை குறித்த அறிவிப்பு களை வெளி யிட்டுள்ளது.
Thanks for Your Comments