இருதயத்தின் ஓய்வும் இயக்கமும் !

0
மேலோட்டமாகப் பார்த்தால் ஒற்றை விசை அமைப்பு போல் இதயத்தின் இரண்டு பக்கங்களையும்
 
சுருங்கி விரிந்து ரத்தத்தைப் பெறும் வேலையையும், அனுப்பும் வேலையையும் செய்வது போல் தோன்றும்.

ஆனால் இதயத்தின் வலப்பக்கம் தனி விசையாகவும், இடப்பக்கம் தனி விசை அமைப்பைக் கொண்டதாகவே கருதப் படுகிறது.

இதயம் துடித்துக் கொண்டிருப்பது ஒன்று. அப்படியானால் இதயம் எந்நேரமும் இயங்கிக் கொண்டேதான் இருக்குமா?


அதற்கு ஓய்வு என்பதே கிடையாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

பொதுவாக நம் இதயம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது போல் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

எந்த உறுப்பாக இருந்தாலும் அது நீண்ட நாள்களுக்கு நன்றாகச் செயல்பட சற்று ஓய்வு தேவை.

இதயத்துக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் மற்ற உறுப்புகளைப் போல் இதயம் ஓய்வு எடுத்தால் நமது நிலை என்னவாகும்?

இதயம் இயங்கிக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொள்ள இயற்கையே சில விந்தையான வழி முறைகளை வகுத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது கிடைக்கும். அரை நொடிப் பொழுதை (Half a second) இதயம் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

இதுபோல் இரவில் தூங்கும் போது நம் உடலில் உள் மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய் களுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்புவதை

ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், இதயமானது தன்னுடைய வேலைத் திறனை குறைத்து ஓய்வு எடுத்துக் கொள்கிறது.

லப், டப்& இவை இதயத்தின் துடிப்பைக் குறிக்கும் சொற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 

இதயத்தில் இருந்து எழும் இந்த ஒலிதான் அது இயங்கு வதற்கான அறிகுறி.

அமைதியான நேரத்தில் மற்றவரின் நெஞ்சுப் பகுதியில் கூர்மையாக உங்கள் காதை வைத்தோ

அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவியை உங்கள் மார்பில் இடப்பக்கத்தில் வைத்தோ

உன்னிப்பாகக் கவனித்தால் இதயத்தின் லப், டப் சத்தத்தை கேட்கலாம்.

முதலில் ஏற்படுவது ”லப்” என்ற ஒலியாகும். இந்த ஒலி ஒரு நொடியில் 10&ல் ஒரு பங்கு நேரம் கேட்கும்.


இந்த ஒலியை கதவை மூடும் சத்தத்துக்கு ஒப்பிடலாம். 

இந்த ஒலியானது இதயத்தின் மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் இடையே உள்ள

இரண்டு வால்வுகள் மூடுவதாலும் இந்த அறைகளில் உள்ள தசைகள் சுருங்குவதாலும் ஏற்படுகிறது.

இரண்டாவது ஒலியான ”டப்” இதயத் தமனிகளில் உள்ள வால்வுகள் மூடுவதால் ஏற்படுகிறது.

இதயம் தொடர்பாக இன்னோர் ஆச்சரியமான தகவலைச் சொல்லட்டுமா? இதயம் என்பது

மின் ஆற்றலால் இயக்கப்படும் ஓர் உறுப்பு. இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப் போனால் மின்சாரத்தால் இயக்கப்படும் பம்பிங் (pump) எந்திரம்.

நம் உடலுக்குள் ஏது மின்சாரம் என நீங்கள் நம்ப முடியாமல் கேட்பது புரிகிறது.

இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings