அம்பு ஏவி இந்திய வம்சாவளி பெண் கொலை - வயிற்றிலிருந்த தப்பிய சிசு !

0
லண்டன் நகரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வில் அம்பு தாக்குதலால் பலியாகி யுள்ளார். 
அவரது வயிற்றில் இருந்த சிசு பத்திரமாக தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

கிழக்கு லண்டன் பகுதியில் திங்கள்கிழமை மாலையில், தேவி என்ற 35 வயது பெண் வில்லம்பு தாக்குதலால் 


காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். 

அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே உடனடியாக அறுவை சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்பட்டது. 

அந்த குழந்தை உயிர் பிழைத்தாலும் கூட தேவி மரணம் அடைந்தார்.

முன்னாள் கணவர்

இது தொடர்பாக, அம்பை ஏவியதாக, ராமனோட்ஜ், என்ற 50 வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார். 

இவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவராகும். "இது ஒரு சோகமான சம்பவம். 

எங்களது அனுதாபங் களை அந்த பெண்ணின் குடும்பத்தாரு க்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டாவது திருமணம்

லண்டனில் தேவி, சனா முஹம்மது என்று அறியப்பட்டார். ஏனெனில், 7 வருடங்கள் முன்பாக 


இம்தியாஸ் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு தேவி இஸ்லாமுக்கு மாறியுள்ளார். 
தேவிக்கும் ரமனோட்ஜ் ஆகியோருக்கும், 18, 14 மற்றும் 12 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இம்தியாஸ் முகமதை திருமணம் செய்த பிறகு 5 மற்றும் 2 ஆகிய வயதுகளில் இரு பெண் குழந்தைகள் அந்த தம்பதிக்கு உள்ளனர். 

இப்போது நடைபெற்ற அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

அந்த குழந்தைக்கு, இப்ராஹிம் என்று இம்தியாஸ் முகமது பெயர் சூட்டியுள்ளார்.

நல்ல பெண்

இது குறித்து இம்தியாஸ் முகமது அந்த நாட்டு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், சனா ஒரு சிறப்பான தாய் மற்றும் மனைவியாக இருந்தார். 

ஏழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். சனா இறந்த செய்தி இதயத்தை நொறுக்குவது போல உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

அதிசயமாக தப்பியது


ஏவப்பட்ட அம்பு, சனாவில், வயிற்றில் இருந்து இதயம் வரை பாய்ந்துள்ளது. ஆனால், குழந்தையின் மீது அந்த அம்பு படவில்லை. 

இன்னும் நான்கு வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டி இருந்த நிலையில், ஒன்பதாவது மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை வெளியே எடுக்கப் பட்டுள்ளது. 

இப்போது குழந்தை நலமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings