பயங்கர ஆபத்திலிருந்து தப்பிய மெல்பேர்ன் - பயங்கரவாத முயற்சி !

0
ஆஸ்திரேலியா வின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 
மூவரை கைது செய்துள்ள பொலிஸார் கைது செய்யப் பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து 

காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்ட மிட்டிருந்தனர் எனவும் தெரிவித் துள்ளனர்.


மெல்பேர்னின் வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் 

முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே போலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள போலிஸார் 

இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப் பட்டவர்கள் எனவும் குறிப்பிட் டுள்ளனர்.

17000 தொலைபேசி அழைப்பு களையும் 10,000 குறுஞ்செய்தி களையும் இடை மறித்து கேட்ட பின்னர் 

இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட முயல்கின்றனர் என்பதை உறுதி செய்ததாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

மூவரினதும் நடவடிக்கைகள் தீவிர மடைந்ததை அவதானித்த பின்னர் இன்று காலை 

அவர்கள் கைது செய்யப் பட்டனர் எனவும் போலிஸார் தெரிவித் துள்ளனர்.

அவர்கள் நிச்சயமாக ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப் பட்டிருந்தனர் எனினும் தாங்கள் தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய இடத்தினை 

அவர்கள் இன்னமும் தீர்மானிக்காத நிலை யிலிருந்தனர் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.


மூவரும் துருக்கி வம்சாவளியினர் ஆனால் ஆஸ்திரேலிய பிரஜைகள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் 

கடந்த வாரம் இவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற் காக துப்பாக்கிகளை பெற முயற்சித்தனர் எனவும் குறிப்பிட் டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings