இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் மார்க் வகைக் கொண்ட ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
இதில் எடைக் குறைந்த ராக்கெட்டுகளை பி.எஸ்.எல்.வி. மூலமாகவும், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாகவும்,
இன்னும் கூடதலான எடை கொண்ட செயற்கைக் கோள்களை கிட்டத் தட்ட 3000 முதல் 4000 கிடோ
எடைக் கொண்ட செயற்கைக் கோள்களை மார்க் 3 ராக்கெட் மூலமாகவும் ஏவி வருகிறது.
எனவே அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் மிக பலமான ராக்கெட்டான
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கின்றனர்.
இஸ்ரோவின் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி - 3 உயரம் 22.7 மீட்டர், 40 கிலோ எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருந்தது.
இதற்கடுத்து ஏஎஸ்எல்வி ராக்கெட் 23.5 மீட்டர் உயரமும் 150 கிலோ எடைக் கொண்ட செயற்கைக் கோள்களை எடுத்துச் சென்றது.
அதன் பின்பு, இஸ்ரோ தனது முயற்சியில் ஒரே பாய்ச்சலாக பிஎஸ்எல்வி ராக்கெட்டுக ளை தயாரித்தது
அவை 44 மீட்டர் உயரமும், 1860 கிலோ எடைக் கொண்ட செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இஸ்ரோ விண்ணில் பல சாதனைகளை நிகழ்த்தியது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகத் தான்.
இதற்கடுத்து ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டு களை தயாரித்தது.
இது இஸ்ரோவின் தயாரிப்பிலேயே அதிக உயரம் கொண்டது, இது 49 மீட்டர் உயர் கொண்டதாக வடிவமைக் கப்பட்டது.
மேலும் 2200 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் நவீனப் படுத்தப்பட்டது.
இப்போது ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.
இது மார்க் 2 ராக்கெட்டை விட உயரத்தில் குறைவு அதாவது இதன் உயரம் 43.43 மீட்டர்தான்.
ஆனால், 4 ஆயிரம் கிலோ வரை எடைக் கொண்ட செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் திறனை பெற்றுள்ளது.
இஸ்ரோ இன்று மூன்றாவது முறையாக மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.
இந்த ராக்கெட்டில் கடல்சார் ஆராய்ச்சி, தொலையுணர்வு தகவல்களை பெறுவது,
உயர் நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோள் அனுப்புகிறது.
இந்தச் செயற்கைக்கோள் 3,423 கிலோ எடை கொண்டதாக இஸ்ரோ உருவாக்கி யுள்ளது.
இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி ஜிசாட் 19 செயற்கைக் கோளை மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஆனால் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை மார்க் 3 மூலம்
விண்ணில் செலுத்தி முதல் முறையாக சோதனை செய்து வெற்றிப் பெற்றது இஸ்ரோ.
Thanks for Your Comments