சேலத்தில் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க கொசு புழுக்களை உண்ணும் கம்பூசியா மீன்கள் நீர் நிலைகளில் விடப்பட உள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக் கானோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளதாக கருதப் படுகிறது.
இதில் பெரும் பாலனோர் குழந்தைகள் மற்றும் பெண்களா வார்கள்.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உயிரிழப்பு களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து வருகிறது.
இதை யடுத்து இம்மாவட்ட த்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை களை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி யுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் அலங்கார மீன உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார்.
இவர் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் கம்பூசியா மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்து
தற்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கி யுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்.
தமிழகத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய டெங்கு நோயை கட்டுப் படுத்த டெங்கு கொசுப் புழுக்களை உண்ணும்
கம்பூசியா மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்து மாநகராட்சிக்கு இலவசமாக வழங்கி யுள்ளோம்.
கொசுப் புழுக்களை உண்ணும் இந்த கம்பூசியா மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் நன்னீர் குட்டை, குளங்கள், ஏரிகள் மற்றும்
நீர்தேக்கங்கள் ஆகிய வற்றில் விடுவார்கள். இதன்மூலம் டெங்கு கொசு உற்பத்தியைக் குறைக்க முடியும்.
இதுவரை 70 ஆயிரம் மீன்கள் மாநகராட்சிக்கு வழங்கி யுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments