அம்மாவின் கனவை நிறைவேற்றிய விமானி - நெகிழ்ச்சி சம்பவம் !

0
நீண்ட நாள் சபதத்திற்கு பிறகு அம்மா பாட்டியுடன் விமானி ஒருவர் விமானத்தில் பறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். 


2007 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தற்போது வரை 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது அம்மா, பாட்டி, தங்கையுடன் தான் ஓட்டும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். 

விமானத்தை இயக்குவதற்கு முன்பு தனது அம்மா மற்றும் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு சென்றார்.

இவரின் இத்தகைய செயலை அருகில் இருந்தவர்கள் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். 

தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைப் பார்க்கும் வலை தளவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இந்த வீடியோவை பிரதீப் கிருஷ்ணன் நண்பன் நாகர்ஜூன் திவாரகநாத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு கனவு நினைவானது என கூறியுள்ளார். 

மேலும் தனது ரூம்மேட் பிரதீப் கிருஷ்ணன் இண்டிகோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து 

தனது அம்மா, பாட்டி, சகோதரியுடன் முதன் முதலில் பயணம் செய்கிறார் என குறிப்பிட்டி ருந்தார்.


இதனிடையே பிரதீப் கிருஷ்ணன் இல்லாமல் விமானத்தில் பயணிக்க மாட்டோம் என அவரது அம்மாவும் பாட்டியும் சபதம் ஏற்றிருந்ததனர். 

சென்னை டூ சிங்கப்பூர் சென்ற இண்டிகோ வின் முதல் விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings