வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி களுக்கும்,
தனியார் வானிலை ஆய்வாளர் களுக்கும், பெரும் சவாலாக உருவாகி யுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்பட்ட நிலையில்
பின்னர அது புயலாக உருவெடுத்ததாக வானிலை இலாகாவால் அ்றிவிக்கப் பட்டது.
புயலுக்கு பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு பகுதியாக, தாய்லாந்து நாடு சார்பில், இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டியுள்ளது.
விரல் விட்டு ஆட்டுது
ஆனால் இந்த புயல் அத்தனைபேரின் கண்களும் விரலைவிட்டு ஆட்டி வருகிறது.
புயல் நகரும் திசை என்பதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் கடலூர் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்ற அளவில் கணிக்கப் பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் மாலையில், இந்த நிலை மாறி, புயல் கடலூரு க்கும் பாம்பனுக்கும் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப் பட்டது.
புயலின் வேகத்திலும் வித்தியாசம் காணப்படு கிறது.
வேகத்தில் வேறுபாடு
நேற்று அதிகாலை ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து பிறகு நான்கு கிலோ மீட்டர் வேகத்தில் குறைந்தது.
ஆனால் மதியம் மும்மடங்காக வேகம் அதிகரித்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.
இப்போது மீண்டும் ஆறு கிலோ மீட்டராக வேகம் குறைந்து நகர்ந்தபடி உள்ளது.
எப்போது வரும்
புயலின் வேகம் மற்றும் அதன் திசை தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும் கூட இந்த புயல் கண்ணாமூச்சி தான் காட்டிக் கொண்டு உள்ளது.
அங்கே வருகிறது எங்கே வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இன்னும் புயல் வந்தபாடில்லை.
மாலையில் கரையை கடக்கும்
நாளை மதியம் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மாலையில் தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
யப்பா டேய்! உன்கிட்ட சிக்கிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே! சீக்கீரம் நகர்ந்து தொலடா!#Gaja #GajaCyclone #கஜா #கஜாவராண்டா pic.twitter.com/wDAtT2O1oH— ஆரூர்.ம.எழிலன் 2⃣ (@ezhilandentist) November 14, 2018
இதைத் தான் இந்த ஒரு மீம் தெளிவாக சொல்கிறது. சீக்கிரம் நகர்ந்து செல்லப்பா.. நாங்கள் படும் அவஸ்தை தாங்க முடியவில்லை..
மயக்கமே வந்து விடுகிறது என்பது போல ஆய்வாளர்கள் சொல்வதை போல உள்ளது.
Thanks for Your Comments