மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ரூ. 100 கோடி செலவில் முழுவதும் உள் நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ள இந்த ரயில், 18 மாதங்களில் உருவாக்கப் பட்டது.
இதில் பயன்படுத்தப் பட்டுள்ள 80 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப் பட்டதாகும்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை யில் ‘ரயில் 18’ என்ற அதிவிரைவு ரயில் ரூ.100 கோடியில் தயாரிக்கப் பட்டது.
மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இந்த ரயில் உள்ளது.
இந்த ரயிலுக்கு இன்ஜின் தனியாக இல்லாமல், பெட்டிகளுடன் இணைக்கப் பட்டதாக இருக்கும்.
2 உயர்வகுப்பு பெட்டிகள், 14 சாதாரண பெட்டிகள் என 16 பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும்.
மொத்தம் 1,128 இருக்கைகள் மற்றும் வைஃபை வசதியும், ஜிபிஎஸ் அடிப்படை யில் பயணிகளுக்கு தகவல் வழங்கும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளன.
நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்புக் கூடம் மற்றும் விநியோகி க்கும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ரயில் ஓட்டுநர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
முழுமையான குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த ரயிலில் 16 பெட்டிகள் சேர்கார் வசதியுடனும்,
2 பெட்டிகள் எக்சிக்யூட்டிவ் சேர் கார் வசதியுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
எக்சிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் சுழலும் வசதியுடன் நாற்காலிகள் அமைக்கப் பட்டுள்ளன.
அழகிய உள் வடிவமைப்பு, WIFI, ஜி.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.
பயணிகளின் உடைமைகள் அதிக அளவில் வைக்கக் கூடிய அளவிலும் இடவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ரயில் பெட்டிகளின் கதவுகளும், படிகளும் தானியங்கி முறையில் இயக்கப்படும்.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், சதாப்தி ரயிலுக்குப் பதில் பயன்படுத்தப் படவுள்ளது.
இந்நிலையில் சோதனை ஓட்டமாக ‘ரயில் 18’ உத்தரப் பிரதேசத்தில் பரேய்லி - மொரதாபாத் இடையே நாளை இயக்கப்பட உள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தை கண்காணிக்க ஆர்.எடி.எஸ்.ஓ குழு மொராதாபாத்தை சென்றடைந்தது.
சோதனை ஓட்டத்திற்கு பின் இந்த ரயிலை முதல் கட்டமாக வட மாநிலத்தில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
Thanks for Your Comments