பராமரிப்பு பணியின் போது மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிய ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அமராவதி பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை என பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி ஏறியப்பட்ட அவர், மின் கம்பத்தில் இருந்து தலைக் குப்புற விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்தக் காயமடைந்த அவரை, அங்கிருந்த வர்கள் குமுளி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குமுளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ஊழியருக்கு மனைவியும், கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர்.
மின்தடை செய்யாமல் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டதே, உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Thanks for Your Comments