புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை, வாழை கன்றுகள் !

0
கஜா புயலால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங் களில் உள்ள விவசாயி களுக்கு இலவசமாக 


வாழை, தென்னை கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங் களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந் துள்ளனர். 

12 மாவட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு வேராக முறிந்து கிடக்கின்றன. 

இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வா தாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர். 

மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப் படுத்தும் பணி தொடர்ச்சி யாக நடைபெற்று வருகிறது.

இந்நிலை யில் கஜா புயலால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங் களில் உள்ள விவசாயி களுக்கு 

இலவசமாக தென்னை, வாழை கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


இதன் மூலம் மரம் விழுந்த இடங்களில் அவர்களால் புதிய கன்றுகளை நட முடியும். 

அத்துடன் முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப் படுத்தவற் கான தொகையை ஆட்சியர் மூலம் 

சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings