உலகின் மிகப் பெரிய தொலை நோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’,
வருகிற 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப் படுகிறது.
இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர் களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப் படுகிறது.
சிலி மலைத் தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல் திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கி விட்டனர்.
புதிய தொலை நோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.
எனவே தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவை காங்கிரீட்டி னால் நிரப்பப்பட்டு, தொலை நோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
Thanks for Your Comments