கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சி யில்
கூட்டம் இல்லாமல் அரங்கம் காலியாக இருந்ததால் அமைச்சர் தரப்பு அச்செட் ஆனது.
நிமிர்ந்து அரங்கம் முழுவதையும் பார்த்துபேச வழியில்லாமல் முன் வரிசைகளில்
உட்கார்ந்திருந்த வர்களை மட்டும் பார்த்தபடி அமைச்சர் பேசியது விழா ஏற்பாட்டாள ர்களை நெளிய வைத்தது.
இந்தியாவில் 129 மாவட்டங்கள் பயனடையும் வகையில் 63 இடங்களில் ‘நகர எரிவாயு திட்டத்தை’
பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இன்று துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் கோவை, சேலம் ஆகிய இரண்டு மாவட்டங் களில் இயற்கை எரிவாயு சப்ளை டெண்டரை எடுத்துள்ள
‘இந்தியன் ஆயில்’ நிறுவனம் அதற்காக கோவை கொடிசியா வளாகத்தின் பிரம்மாண்ட அரங்கில் விழா ஏற்பாடு செய்திருந்தது.
குளிரூட்டப் பட்ட அரங்கில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப் பட்டிருந்தன.
நிகழ்ச்சி மதிய உணவுக்குப் பிறகு ஆரம்பித்ததால், வருபவர் களுக்கு லெக் பீஸோடு,
‘சிக்கன் பிரியாணி’ ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும், ஆட்கள் திரள வில்லை.
இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள். மற்றும் அமைச்சரோடு வந்தவர்கள், மீடியாவைச் சேர்ந்தவர்கள்,
வரவேற்பு பெண்கள் இவர்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் எண்ணிக்கை இருநூறைக் கூட தொடாது.
அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன்,
பி.ஜே.பி மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்த பிறகும் அரங்கத்தில் கூட்டத்தைக் காணோம்.
செய்வதறியாது முன் வரிசையில் அமர்ந்திருப்ப வர்களை பார்த்துக் கொண்டே
மைக் பிடித்த அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், “சுற்றுச்சூழல் பிரச்னை தான் உலக அளவில் முக்கியமயான பிரச்னையாக இருக்கிறது.
வாகனங்கள், தொழிற் சாலைகள், வீடுகளில் பயன் படுத்தப்படும் எரி பொருட்கள் சுற்றுச் சூழலை வெகுவாக பாதிக்கின்றன.
இதனை சரி செய்ய நாம் இயற்கை எரிவாயுக்கு மாற வேண்டும்.
காற்றில் இருக்கும் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பல நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுவது போல் தமிழகத்தில் கோவை உட்பட பல மாவட்டங் களில் நடைமுறைப் படுத்தப்படும்.
எதிர் வரும் காலத்தில் கோவை சிங்கப்பூராக மாறும் என்றார்”
பிரதமர் மோடி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் நேரில் வந்து கலந்து கொள்கிறார் ஆயிரம் பேர் கூடவா வரமாட்டார்கள்?
என்ற எண்ணத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்தியன் ஆயில் நிறுவத்தினருக்கு பெரும் ஏமாற்றம். அமைச்சர் தரப்பும் அப்செட்.
Thanks for Your Comments