வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் உள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும் போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும். சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது.
இந்த நிலையில், கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கி யுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகையின் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10 முகாம்களில் 10 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதே போன்று திருத்துறைப் பூண்டியில் 2,207 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கடலூரின் கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் பல்வேறு கிராமங் களை சேர்ந்த 750 பேர் நிவாரண முகாம்களு க்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
பொது மக்கள் மழையின் பொழுது, ஈரம் நிறைந்த சுவர், மரம் ஆகிய வற்றின் அருகே ஒதுங்க வேண்டாம்.
இரவு 8 மணிக்கு மேல் வெளியே செல்லாமல் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அன்பு செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்வ தற்காக இந்திய கடலோர காவல் படையின் 4 கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
Thanks for Your Comments