பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? தெரியுமா?

மழை காலங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் வந்து தண்ணீர் தேங்குவது என்பது வாடிக்கையாகி விட்டது. 


சென்னை வெள்ளம், வர்தா புயல் ஆகிய சம்பவங் களில் போது பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகவும் கஷ்டப் பட்டனர். 

பலரது கார், பைக் தண்ணீரில் முழ்கியது. அதில் சில பயன்படாத நிலைக்கே சென்றது.

இனி அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் கார்களில் தண்ணீர் புகுந்து அது கார் இன்ஜினில் எந்த மாற்றங்களை ஏற்படுத்து கிறது. 

அதனால் ஏற்படும் பிரச்னைகள், அறிகுறிகள், அதற்கான தீர்வுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

அவற்றை பற்றி தான் விவரிக்கிறது இந்த செய்தி

பிரச்னைகள்

பெட்ரோல் டேங்க் துரு பிடித்தல்

பெட்ரோலை விட தண்ணீர் அடர்த்தி அதிகமானது. இதனால் பெட்ரோல்/ டீசல் டேங்கிற்குள் புகுந்த தண்ணீர் டேங்கின் அடிப்பகுதி யிலேயே தஞ்சமடையும். 


இதனால் எவ்வளவு அதிக நாள் டேங்கில் தண்ணீர் தேங்குகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு டேங்கின் உட்புறமாக துரு பிடிக்கும்.

இன்ஜெக்டர் செயல் இழக்கும்

நவீன கார்களில் கார்பரேட்டர் களுக்கு பதிலான இன்ஜெக்டர்களே பயன்படுத்தப் படுகின்றன. 

அந்த இன்ஜெக்டரில் உள்ள துளை பெட்ரோல்/டீசல் அடர்த்தியை கொண்டே வடிவமைக்கப் பட்டிருக்கும். 

அந்த பகுதி வழியாக தண்ணீர் சென்றால் அதன் அடர்த்தி காரணமாக இன்ஜெக்டர் அதிக சக்தியை பயன்படுத்தும்.

இதனால் இன்ஜெக்டர் செயல் இழக்க கூட வாய்ப்புள்ளது.

பியூயல் பம்ப் செயல் இழக்கும்

தண்ணீர் பெட்ரோல்/ டீசல் டேங்கின் அடிப்பகுதி யிலேயே தங்கும். அதே நேரத்தில் 


டேங்கின் அடிப்பகுதி யில் இருந்தே பெட்ரோல்/ டீசலை எடுக்கும் படி டேங்க் வடிவமைக்கப் பட்டிருக்கும். 

பியூயல் பம்ப் உள்ள இன்ஜின்களில் பெட்ரோல்/ டீசல் தான் கூலண்ட் களாகவும், 

மசகு தன்மைக்கும் உதவும், அதில் தண்ணீர் நுழைந்தால் இந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கும்.

மேலும் அதிக நேரம் இந்த தண்ணீர் இந்த பம்ப்பில் இருந்தால் இது துரு பிடிக்கும் நிலைக்கும் தள்ளப்படும்.

இன்ஜின் ஆயலை பாதிக்கும்

இந்த செயலையும் மீறி தண்ணீர் இன்ஜினுக்கும் புகுந்தால் அது நேராக இன்ஜின் ஆயில் இருக்கும் பகுதிக்கு செல்லும். 


அங்கு செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் இது இன்ஜின் ஆயிலுடன் கலந்து அதன் மசகு தன்மையை குறைத்து விடும்.

இன்ஜின் செயல் இழக்கும்

மேல் அனைத்தும் நிகழ்ந்து விட்டால் இன்ஜின் முழவதும் தண்ணீர் புகுந்து துரு பிடித்து இன்ஜின் முழுவதும் செயல் இழந்து விடும். 
அவ்வாறாக நடக்கும் பட்சத்தில் முழு இன்ஜினையும் மாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை.
Tags:
Privacy and cookie settings