ஒரு பைசா செலவின்றி ஏசி போடணுமா?

வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் போட்டுப் பராமரிக்க லாம் என்கிறார்களே... என்னென்ன செடிகள் வைக்கலாம்? அதனால் என்னென்ன பலன் கிடைக்கிறது?
ஒரு பைசா செலவின்றி ஏசி போடணுமா?
- ரா.மல்லிகா, மதுரை.

பதில் சொல்கிறார் சுப்பிரமணிய ராஜா (பசுமைக்குடில் ஆர்வலர், ராஜ பாளையம்.) முதலில் மொட்டை மாடியில் தோட்டம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சிலர் மாடியில் தாவரங்களைப் பயிரிட்டால், அதனால் சீலிங் பாதிக்கப் படாதா என்றெல்லாம் கேட்கிறார்கள்.  

மொட்டை மாடியில் தோட்டம் என்றால், வீட்டின் முன்பாகவோ அல்லது கொல்லைப் புறத்திலோ செடிகள், பூந்தொட்டிகள் வளர்ப்ப தில்லையா? அதை வீட்டு மாடியில் வளர்க்கிறோம் அவ்வளவு தான். 

சிறு வித்தியாசம்... மாடியில் பரந்த இடம் கிடைக்கு மாதலால் தொட்டிகளு க்குப் பதில் சாக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

சாக்குகளில் பாதியளவு மண் நிரப்பி, அதில் செடிகளை நடலாம். பூஞ்செடிகள் முதல் மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறிச் செடிகள், கீரைகள், அவரை, பாகற்காய் போன்ற படர்கிற கொடிகள் வரை எதையும் வளர்க்கலாம். 
கொடிகள் படர்வதற்கு வசதியாக குச்சிகள் கொண்டு குடில் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். 

இந்தச் செடிகளின் வேர்கள் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் செல்வதில்லை என்பதால், மாடியின் தளத்துக்கு இவற்றால் ஆபத்து இல்லை. 

தண்ணீர் ஊற்றும் போது தரையில் படாதபடி ஊற்றிக் கொள்ள வேண்டும். உரங்கள் அவரவர் விருப்பம். என்னிடம் ஆலோசனை கேட்பவர் களுக்கு இயற்கை உரத்தையே பரிந்துரைக் கிறேன். 
ஒரு பைசா செலவின்றி ஏசி போடணுமா?
இதில் வேலை என்றால், தினமும் இரு வேளை தண்ணீர் பாய்ச்ச வேண்டியது மட்டும் தான். பலன்கள் என்று பார்த்தால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைத்து விடுகின்றன. 

கொளுத்தும் வெயில் காலங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்காமல் செடிகள் குளிர்ச்சி தருகின்றன. 

காசு செலவில் லாமல் ஏசி போட்ட எஃபெக்ட் கிடைக்கிறது. மேலும் இதில் தீவிரமாக இறங்கி விட்டவர் களுக்கு நல்ல பொழுது போக்கும் கூட!
Tags:
Privacy and cookie settings