ஹைதராபாத் தில் வீட்டில் வளர்க்கப் பட்ட நாயை 9 நாட்கள் உணவின்றி கட்டிப் போட்டதால் அந்த நாய் உயிரிழந் துள்ளது.
இது குறித்து நாயின் உரிமையாளர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதியப் பட்டுள்ளது.
ஹைதராபாத் தில் உள்ள ஷனாத் நகரின் அடுக்கு மாடி குடியிருப்பின் பால்கனியில் நாய் ஒன்று கட்டப்பட்ட நிலையில் குரைத்துக் கொண்டு இருந்துள்ளது.
தொடர்ந்து நாய் குரைத்துக் கொண்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நாய் மட்டும் பால்கனியில் கட்டப்பட்டு பசியால் துடித்துள்ளது.
அந்த பால்கனிக்கு செல்ல முடியாத நிலையில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நாயுக்கு பிஸ்கட்டும் உணவும் கொடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கம் பக்கத்தினர் ''நாயை உரிய முறையில்
கவனியுங்கள் என்று நாங்கள் பலமுறை அவர்களிட த்தில் கூறியிருக் கிறோம்.
ஆனால் அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்க வில்லை.
தற்போதும் உணவு ஏதுமின்று 9 நாட்களாக நாயை விட்டுச் சென்றுள்ளனர்'' என்று தெரிவித் துள்ளனர்.
ஆனால் 9 நாட்களுக்கு பிறகு நாய் மயங்கி விழுந்துள்ளது.
பால்கனி ஓரத்தில் நாய் மயங்கி கிடக்கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக
பரவ விலங்கியல் ஆர்வலர் தேஜா பன்னிரு என்பவர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.
போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்த போது நாய் துரதிஷ்ட வசமாக உயிரிழந் துள்ளது.
நாய் உயிரிழந்ததை அடுத்து நாயின் உரிமையாளர் ராம கிருஷ்ணா மீது புகார் அளித்துள்ளார் தேஜா பன்னிரு.
சட்ட விதி 429 -ன் கீழ் ராம கிருஷ்ணா மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜா, ''இந்த விவகாரம் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர் களுக்கு ஓர் உதாரணம்.
அவர்களின் பொறுப்பினை நினைவுப் படுத்தக் கூடிய சம்பவம் இது.
போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்த பட்டவரை தண்டிப்பார்கள் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments