கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.
அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினார்.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க கேட்டு கொண்டார்.
பிரதமரும் மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு நாளை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வருகிறது.
முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்த குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடு கிறார்கள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகிறது.
Thanks for Your Comments